Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்! சுவாரஸ்ய தகவல்!

Advertiesment
விஜய் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அஜித்! சுவாரஸ்ய தகவல்!
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:04 IST)
சினிமாவை பொறுத்தவரை வரை வாய்ப்பு கிடைப்பதை விட , கிடைத்த வாய்ப்பை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். இங்கு அப்படி அமைவதெல்லாம் ஒரு லக் எல்லோருக்கும் அது அமைந்துவிடாது. ஏன்..! சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களுக்கே சில சமயம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும். அப்படித்தான் நடிகர் அஜித் தவறவிட்ட பட வாய்ப்புகளை விஜய் கைப்பற்றி சூப்பர் ஹிட் அடித்துள்ளார்.


 
தமிழ் சினிமாவில் இரு பெரும்  ஜாம்பவங்களான அஜித்,  விஜய் என்றாலே மிகப்பெரிய போட்டியே நிலவும் இதனை அவர்கள் இருவரும் மறுத்தாலும் அவரின்  ரசிகர்கள் எப்போதும் போரில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். அஜித் - விஜய் தங்கள் தொழிலில் போட்டி போட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ அவர்களின் அரசிகர்கள் எப்போதும் சண்டையிட்டு கொள்வார்கள்.  
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், விஜய் நடித்த நேருக்கு நேர், லவ் டுடே போன்ற பல பட வாய்ப்புகள் அஜித்திற்கு தான் முதலில் வந்துள்ளது. அப்படி விஜய் நடித்த ஒரு படத்தில் அஜித் தான் நடிக்கவில்லையே என்று கூறி வருத்தந்தியுள்ளார். 

webdunia

 
நடிகர் விஜய்யின்  பிரியமுடன், யூத் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் விண்செண்ட் செல்வா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியதாவது, பிரியமுடன் படத்தைப் பார்த்துட்டு அஜித் என்னைக் கூப்பிட்டு “இந்த கேரக்டரை நான் பண்ணியிருக்கணும் செல்வா”னு சொன்னார் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பிட்ட மிச்சமான உணவுதான் தர்றாங்க ... ’அட்லி மீது நடிகை போலீஸில் புகார் ’