Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’விஜய் மக்கள் மன்றத் தலைவர் ’தம்பியை கொன்றுவிட்டு தலைமறைவு

Advertiesment
DMK
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:39 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் மன்றத் தலைவராகவும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராக இருப்பவர் பில்லா ஜெகன், இவருக்கும் இவரது சொந்த தம்பிக்கும் நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு இருந்ததாகத் தெரிகிறது. 
இந்நிலையில் இன்று அதிகாலை வேளையின் போது இருவருக்கும் இடையே மோதல் வெடித்து சண்டையாக மாறியது. இதில் கோபாவேசம் அடைந்த பில்லா ஜெகன், தன்னிடம் இருந்த துப்பாகியால், தனது தம்பி ஆனந்தனை சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
webdunia
தற்போது தலைமறைவாகவுள்ள தூத்துக்குடி திமுக பிரமுகர் மற்றும் விஜய் மக்கள் மன்றத் தலைவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ