தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் துணைநடிகை ஒருவர் இயக்குநர் அட்லி மீது போலீஸில் பரபரப்பு புகார்  கூறியுள்ளார்.
 
									
										
								
																	
	விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என தகவல் வெளிவந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. 
 
									
										
			        							
								
																	
	 
	இந்நிலையில் இப்படத்தில் துணநடிகை கிருஷ்ணவேனி என்பவர் சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
 
									
											
									
			        							
								
																	
									
			                     
							
							
			        							
								
																	
	படப்பிடிப்பில் துணைநடிகைகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததால் நடவடிக்கை தேவை என்று மனு கொடுத்துள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	படப்பிடிப்பில் அடுத்தவர்கள் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவு துணைநடிகைகளுக்கு தரப்படுவதாகவும், படப்பிடிப்பில் துணைநடிகைகளை அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகவும்  கிருஷ்ணவேனி தனது மனுவில் கூறியுள்ளார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	தற்போது விஜய் 63 என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்துவருகிறது குறிப்பிடத்தக்கது.