Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் அருண்குமார் இணையும் படத்தின் ப்ரோமோஷூட்… லேட்டஸ்ட் அப்டேட்!

விக்ரம் அருண்குமார் இணையும் படத்தின் ப்ரோமோஷூட்… லேட்டஸ்ட் அப்டேட்!
, வியாழன், 19 அக்டோபர் 2023 (07:46 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்குமார் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பாராட்டுகளையும் வசூலையும் குவித்துள்ளது.

சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்குமார் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ப்ரோமோ ஷூட் விரைவில் சென்னையில் நடக்க உள்ளது. அதன் பிறகு முன் தயாரிப்புப் பணிகள் முடிந்ததும் படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாக்ஸ்ராக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்… எந்த படத்தில் தெரியுமா?