தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து கார் ரேஸ் பந்தயங்களில் ஆர்வமாக இருக்கும் அஜித், நவம்பர் மாதத்தில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்நிலையில் அஜித் கார் ரேஸ் சம்மந்தப்பட்ட படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது GT4 ஈரோப்பியன் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். இதையடுத்து அவர் ஐரோப்பாவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.