Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு ட்ஜிட்டலில் வெளியாகும் அஜித் படம் -இயக்குனர் மும்முரம் !

24 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு ட்ஜிட்டலில் வெளியாகும் அஜித் படம்  -இயக்குனர் மும்முரம் !
, வெள்ளி, 6 டிசம்பர் 2019 (12:54 IST)
அஜித், ரஞ்சித் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான மைனர் மாப்பிள்ளை எனும் படம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் ரிலிஸாக உள்ளது.

அஜித், ரஞ்சித், வடிவேலு, விவேக் மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் கடந்த 1995 ஆம் வருடம் வெளியான படம் மைனர் மாப்பிள்ளை. நகைச்சுவை அம்சங்களை முன்னிறுத்தி உருவான இந்தப்படம் அப்போது பெரிதாக வெற்றி பெறவில்லை. இப்படத்தில் அஜித்தே கூட குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற வேடத்தில்தான் நடித்திருப்பார். இப்படத்தை இயக்குனர் விசி குகநாதன் இயக்கினார்.

24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் மயமாகி இந்தப்படத்தை குகநாதன் ரிலிஸ் செய்ய இருக்கிறார். படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை செய்து வருகிறார். படம் விரைவில் ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு அஜித்தை ஒரு மேடையில் வைத்தே இயக்குனர் குகநாதன் மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஞ்சித் படத்துக்கு தியேட்டர்கள் இல்லை – ஏன் தெரியுமா ?