Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''வலிமை'' பட update கேட்டிருக்கும் ரசிகர்களுக்கு..அஜித் மேலாளர் அறிவிப்பு...

''வலிமை''  பட update கேட்டிருக்கும்  ரசிகர்களுக்கு..அஜித் மேலாளர் அறிவிப்பு...
, வியாழன், 10 டிசம்பர் 2020 (23:13 IST)
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குநர் போனி கபூர் தயாரித்துவருகிறார். இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், அஜித்தின் மேலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில்,

படப்பிடிப்பினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைக் கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித்குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து வலிமை படம் அப்டேட் குறித்து உரிய முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் , அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகை.... புகைப்படம் வைரல்