Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தொலைக்காட்சிக்குக் கைமாறும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (08:40 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  ஆனாலும் ஊடகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைதன் பெற்றது. தமிழ்நாட்டைத் தவிர இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை.

உலகளவில் இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து  மே 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. இதையடுத்து நெட்பிளிக்ஸின் ‘முதல் 10 ஆங்கிலப் படங்கள் அல்லாத படங்களின்’ டிரண்டிங்கில் இணைந்துள்ளது. அதே போல படம் வெளியான போது வரவேற்புக் கிடைக்காத தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மாநிலங்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை முதலில் கைப்பற்றிய சன் தொலைக்காட்சி அதைத் திரும்ப கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படத்துக்கு சன் தொலைக்காட்சியில் எதிர்பார்த்த வரவேற்புக் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ‘குட் பேட் அக்லி’ படத்தை விஜய் தொலைக்காட்சியிடம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் ஒளிபரப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments