அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
படத்தில் கதை என்பதோ, சுவாரஸ்யமான திரைக்கதை என்பதோ மருந்தளவுக்கும் இல்லை. அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் இமேஜ்களை படத்தில் ஆங்காங்கே சொருகி அஜித் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டி விட்டுள்ளார் ஆதிக். படம் முழுவதும் அஜித் கதாபாத்திரத்தை மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் வானளாவ புகழ்ந்து தள்ளுகின்றன. அவர் கூட கதாபாத்திரங்கள் கொடுக்கும் பில்ட் அப் களை விட வில்லன்கள் கொடுக்கும் பில்ட் அப் ஓவரா கூவுறாண்டா என்பது போல இருக்கிறது.
வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதனால் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.