‘என் எல்லா சாதனைகளுக்கும் பின்னால் இருப்பவர் ஷாலினிதான்’… அஜித் நெகிழ்ச்சி!

vinoth
புதன், 30 ஏப்ரல் 2025 (08:12 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. தற்போது சினிமாவுக்கு வெளியே கார் பந்தயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார் அஜித்.

கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பாக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பிய அவர் விரைவில் ஊடகங்களை சந்திக்கவுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் தன்னுடைய மனைவி ஷாலினி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் “என் மனைவி ஷாலினி எங்கள் திருமணத்துக்கு முன்பு பிரபலமான நடிகையாக இருந்தார். அவர் மேல் ரசிகர்கள் அன்பைப் பொழிந்தனர். ஆனால் எங்கள் திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பை விட்டுவிட்டு எனக்காக உறுதுணையாக இருந்தார். எனக்காக பல தியாகங்களைச் எய்துள்ளார். வாழ்வில் நான் தவறான முடிவுகளை எடுத்தபோதும் ஊக்கமளித்து பக்கபலமாக நிற்பார். நான் சாதித்த அத்தனைக்கும் அவருக்குதான் நான் ‘கிரெடிட்’ கொடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments