Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த அஜித் படத்தில் 10 மடங்கு கிரிஞ்ச் காட்சிகள் இருக்கும்… வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபல இயக்குனர்!

அந்த அஜித் படத்தில் 10 மடங்கு கிரிஞ்ச் காட்சிகள் இருக்கும்… வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரபல இயக்குனர்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (12:20 IST)
அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார். தமன்னா அவருக்கு ஜோடியாக ந்டைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குனர் மெஹர் ரமேஷ். இந்நிலையில் போலா ஷங்கர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “வேதாளம் படத்தில் வழக்கமான படங்களில் இருக்கும் கிரிஞ்ச் சீன்களை விட 10 மடங்கு அதிக கிரிஞ்ச் சீன்கள் இருக்கும்” என பேசியுள்ளார்.

இது தமிழ்நாட்டில் அஜித் ரசிகர்கள் அவரின் பேச்சால் கடுப்பாகியுள்ளனர். தங்கள் நடிகரின் படத்தையே ரீமேக் செய்துவிட்டு அந்த படத்தையும் கிண்டல் செய்வதா எனக் கொந்தளித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடி ரூபாய் வசூலை மிஸ் செய்த சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!