Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 68 படம் கமிட்டானதுக்கு முதல் வாழ்த்தே அஜித்திடம் இருந்துதான்… வெங்கட் பிரபு மகிழ்ச்சி!

விஜய் 68 படம் கமிட்டானதுக்கு முதல் வாழ்த்தே அஜித்திடம் இருந்துதான்… வெங்கட் பிரபு மகிழ்ச்சி!
, புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:33 IST)
விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் லியோ படத்தின் ஷுட்டிங்கை இன்றோடு முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வெங்கட்பிரபு ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி “நான் விஜய் படம் கமிட்டானதும் முதல் வாழ்த்தே அஜித் சாரிடம் இருந்துதான் வந்தது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானத்தின் கேரியர் பெஸ்ட் வசூலை தந்த டிடி ரிட்டர்ன்ஸ்!