Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு ‘குட் பேட் அக்லி’ ஆவது வந்துருக்கும்ல… லைகாவை திட்டும் அஜித் ரசிகர்கள்!

Webdunia
புதன், 1 ஜனவரி 2025 (06:30 IST)
அஜித் நடிப்பில்மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள். “ எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கடைசி நேரத்தில் இப்படி அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முதலில் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படம் முந்திக் கொண்டதால் அவர்கள் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தார்கள். இப்போது விடாமுயற்சியும் கடைசி நேரத்த்தில் வராததால் அஜித் ரசிகர்கள் கோபமாகி லைகாவை திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments