அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் ரிலீஸ் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் நடித்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவை வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அதனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லியில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். அந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் ” அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாருக்கும் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும், முதலில் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகிறது. அதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடிய பிறகு குட் பேட் அக்லி வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.
இதன்மூலம் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதை ஆதிக் ரவிச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edit by Prasanth.K