Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராதா?... உறுதியாய் சொல்லும் பிரபலம்!

Advertiesment
அஜித்

vinoth

, செவ்வாய், 31 டிசம்பர் 2024 (07:39 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தாய்லாந்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பாடல் காட்சியோடு நிறைவடைந்தது. இதையடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘Sawadeeka’ சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி வைரலாகி வருகிறது.

படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது சேனலில் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலில் உள்ளதாகவும் அதனால் அவர்களுக்கு மிகப்பெரிய நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால்தான் சமீபத்தில் ரிலீஸான பாடலில் கூட ரிலீஸ் தேதி போடவில்லை எனவும் படமும் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை என்பதையும் காரணமாக அவர் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் ஏன் மக்களுக்கு connect ஆகலன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… பா ரஞ்சித் வருத்தம்!