மீண்டும் சென்னையில் அஜித் 61 படப்பிடிப்பு… ஸ்ட்ரைக்கால் நடந்த மாற்றம்

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:04 IST)
அஜித் நடிப்பில் உருவாகும் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து மீண்டும் புனேவில் நடக்கும் படப்பிடிப்போடு மொத்த படமும் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments