Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி கட்டப்பா ஸ்டைலில் மகனுடன் புகைப்படம் எடுத்த காஜல்… இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (09:25 IST)
நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நீல் எனப் பெயர் வைத்துள்ள அவர் அவ்வப்போது குழந்தையின் முகம் தெரியாத புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது லேட்டஸ்ட்டாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பாகுபலி படத்தில் கட்டப்பா பாகுபலியின் காலை எடுத்து தனது தலையில் வைத்துக்கொண்டு அர்ப்பணிப்பது போல காஜல் தன் மகனின் காலை தலையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments