துவங்கியது "தல 60" - ஒரே நாளில் மெகா வைரலான புகைப்படம்!

புதன், 11 செப்டம்பர் 2019 (11:11 IST)
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.  


 
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதற்காக தனது கெட்டப்பை மாற்றி இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. 


 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. அஜித் படப்பிடிப்பில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் அஜித் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு மெகா வைரலாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சூர்யாவுடன் மீண்டும் மோதும் பார்த்திபன்!