தல அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி அனிகா சுரேந்தர், அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ‘தல 60’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த தகவலை அனிகா சுரேந்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
‘என்னை அறிந்தால்’ படத்திலும், ‘விஸ்வாசம்’ படத்திலும் கதையின் முக்கிய கதாபாத்திரமாக அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்தர், இந்த இரண்டு படங்களிலும் மிகப்பெரிய புகழ் பெற்றார். இவரது டுவிட்டர் பக்கத்தை அஜித் ரசிகர்கள் பலர் ஃபாலோ செய்ததால் அவரது ஒவ்வொரு டுவீட்டும் வைரலானது
இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்திலும் அனிகா சுரேந்தர் நடிக்கவுள்ளார். அனேகமாக இந்த படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அனிகா சுரேந்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அறிவித்த சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது. ஆனால் ஒருசிலர் அனிகா சுரேந்தரின் இந்த டுவிட்டர் பக்கம் போலி என தெரிவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து படக்குழுவினர்களின் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருப்போம்