Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரு பெரிய ஆள்னு ட்விட்டர்ல அடிச்சு காட்டு!? - தொடங்கியது தல, தளபதி யுத்தம்

Advertiesment
யாரு பெரிய ஆள்னு ட்விட்டர்ல அடிச்சு காட்டு!? - தொடங்கியது தல, தளபதி யுத்தம்
, சனி, 24 ஆகஸ்ட் 2019 (20:32 IST)
விஜய்யின் பெயர் வைக்கப்படாத “தளபதி 64” மற்றும் தல அஜித் அடுத்து நடிக்கும் பெயர் அறிவிக்காத “தல 60” ஆகிய படங்களுக்காக இருதரப்பு ரசிகர்களிடையேயும் இணைய மோதல் ஏற்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில்”. இதன் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி 64” திரைப்படத்திற்கான ஃப்ர்ஸ்ட் போஸ்டர் மற்றும் அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகின. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த செய்தி தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் முழுகடித்துள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட தளபதி 64 போஸ்டர்களை ஷேர் செய்து #Thalapathy64 என்ற ஹேஷ்டேகை பிரபலப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தளபதி ரசிகர்களுக்கு எதிராக தல ரசிகர்கள் ட்விட்டரில் களம் இறங்கியுள்ளனர்.

அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ”நேர்கொண்ட பார்வை” பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தை “தீரன்” படத்தை இயக்கிய வினோத் இயக்கியிருந்தார். இந்நிலையின் அஜித்குமாரின் 60வது படத்தையும் வினோத் இயக்குகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. எனவே “தல 60” என்ற தலைப்பில் போஸ்டர் தயார் செய்த ரசிகர்கள் அதை ட்விட்டரில் ஷேர் செய்து #Thala60 என்ற ஹேஷ்டேகுகளை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

இதனால் எந்த நாயகருடைய படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பகிரப்படுகிறது என்பதில் தல, தளபதி ரசிகர்களிடையே மோதல் எழுந்துள்ளது. அதன் விளைவாக இடண்டு ஹேஷ்டேகுகளும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகிலை தொடர்ந்து “தளபதி 64” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு