ஒட்டுமொத்த குறிவைக்கப்பட்ட ஐஸ்வர்யா? காப்பாற்றுவாரா யாஷிகா?

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (22:29 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாமினேஷன் பிராஸசில் ஒட்டுமொத்தமாக ஐஸ்வர்யா குறிவைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை நாமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா தப்பிக்க வழியே இல்லை. ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மூவரும் ஐஸ்வர்யாவை நாமினேஷன் செய்ய சரியான காரணங்களை கூறினர். மக்களை ஒருமுறை சந்தித்துவிட்டு வாருங்கள் என்று ரித்விகா சொன்னதை ஐஸ்வர்யா ஏற்றுக்கொண்டார்/

இருப்பினும் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகா, இந்த வார வீட்டின் தலைவியாக இருப்பதால் எப்படியேனும் அவரை காப்பாற்ற முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஐஸ்வர்யா நாமினேஷனில் இருந்து தப்பிவிட்டால், பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஒரு போலியான நிகழ்ச்சி தான் என்பதை தவிர சொல்வதற்கு வேறு இல்லை.

அதேபோல் இதுநாள் வரை அன்பு வேஷம் போட்ட மும்தாஜின் முகமூடியும் கலைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதனால் மும்தாஜூம் ஐஸ்வர்யாவை அடுத்து நாமினேஷனில் உள்ளார். இருப்பினும் மக்கள் மத்தியில் சர்வாதிகார டாஸ்க்கில் இருந்தே ஐஸ்வர்யாவின் மீது கோபம் இருப்பதால் முதலில் வெளியேற்றப்பட வேண்டியவர் அவர்தான் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments