லாஸ்லியா மாதிாி பொண்ணு வேணும்..கேட்டுச்சா? இணையத்தை கலக்கும் சிக்ஸர் ட்ரைலர்!

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:37 IST)
மாலைக்கண் நோயை மையப்படுத்தி காமெடி பாணியில் உருவாகியுள்ள சிக்ஸர்  படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 


 
அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், சதீஷ், பலக் லால்வானி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  வால்மேட் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
 
அண்மையில் சிவராத்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து நேற்று படத்தின் டிரைலரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
 
மாலைக்கண் நோயால் அவதிப்படும் ஹீரோ வைபவ், என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கூறியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கென்னடி கிளப் - படம் எப்படி இருக்கு?