ஐஸ்வர்யா ராஜேஷின் டிரைவர் ஜமுனா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (15:21 IST)
தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றன. போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் காரின் முன் டீ  குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது.

கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் திரையரங்க ரிலீஸ் நவம்பர் 11 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்குப் பின்னர் இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments