ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஃபர்ஹானா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.