கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் வி ஜே சித்து ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது இன்னொரு கதாநாயகியாக இன்ஸ்டாகிராம் புகழ் கடாயு லோஹர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே சில கன்னட மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.