Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடி ஓடி ஒரண்டை இழுக்கும் ஆதிரை! கடுப்பான ஹவுஸ்மேட்ஸ்! - Biggboss Season 9

Advertiesment
Biggboss aadhirai

Prasanth K

, வெள்ளி, 10 அக்டோபர் 2025 (12:22 IST)

பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கி ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸாக கண்டெண்ட் தயார் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் அப்சரா இன்னமுமே அமைதியாகவே சுற்றி வருகிறார்.

 

வாட்டர்மெலன் ஸ்டாருடன் வம்பிழுத்தே ரம்யா ஜோ உள்ளிட்டவர்கள் பெர்ஃபாமென்ஸுக்குள் வந்துவிட்ட நிலையில், ஆதிரை ஹவுஸ்மேட்ஸில் உள்ள ஆண்களோடு மோதலில் இறங்கியிருக்கிறார். நேற்று தண்ணீர் பிடிக்கும் டாஸ்க்கில் சில முறை தண்ணீரை தவற விட்டதற்காக கம்ருதீனை எல்லாரும் பேசினாலும், அதிகம் குறை கூறவில்லை.

 

ஆனால் ஆதிரை தொடர்ந்து கம்ருதீனிடம் வாய்விட்டு பிரச்சினையை பெரிதுப்படுத்தினார். அது இன்றைக்கும் கூட தொடர்கிறது என்பது ப்ரோமோவில் தெரிகிறது. ஆதிரை தற்போது லக்ஸரி ஹவுஸில் இருப்பதால், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை ஆர்டர் போட்டுக் கொண்டே இருப்பதும் பலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

 

கனியும், ப்ரவீனும் லக்ஸரி மேட்ஸின் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துவிட, அதற்கு கோபமான ஆதிரை ப்ரவீனிடம் எரிந்து விழுவதும் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. தொடர்ந்து ப்ரவீன், கம்ருதீன் என பலரிடமும் வம்பிழுத்து இன்றைய பிக்பாஸின் டாப்பிக்காக ஆதிரை மாறியுள்ளார் என தெரிகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரிஷாவுக்கு பெற்றோர் பார்த்த தொழிலதிபர் மாப்பிள்ளை.. விரைவில் திருமணமா?