Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் செல்வி என்று போட சொல்கிறேனா? வரலட்சுமி ஓபன் டாக்!

Advertiesment
மக்கள் செல்வி என்று போட சொல்கிறேனா? வரலட்சுமி ஓபன் டாக்!
, சனி, 25 ஜூலை 2020 (13:02 IST)
நடிகை வரலட்சுமி தான் நடிக்கும் படங்களில் மக்கள் செல்வி என்று தனக்கு பட்டம் போடவேண்டும் எனக் கூறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2012 ஆம் ஆண்டே வெளியான போடா போடி திரைப்படத்தில் அறிமுகமானாலும் வரலட்சுமிக்கு பிரேக் கிடைத்தது தார தப்பட்டை, சண்டக்கோழி, நீயா 2 , சர்க்கார் போன்ற படங்களில் நடித்த பின்னர்தான். அதன் பின்னர் தொலைக்காட்சி ஷோக்களிலும் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவர் டேனி மற்றும் வெல்வெட் நகரம் ஆகிய படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டேனி திரைப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகளை ஜூம் செயலி மூலம் செய்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் நீங்கள் மக்கள் செல்வி எனப் பட்டத்துடன் சேர்த்து உங்கள் பெயரை போட சொல்கிறீர்களாமே எனக் கேட்டபோது ‘மக்கள் செல்வி என கீர்த்தி சுரேஷை அழைப்பதாக சொன்னார்கள். ஆனால் விசாரித்தால் அப்படி எதுவும் இல்லை எனக் கூறினார்கள். நான் நடிப்போடு சமூக சேவைகளும் செய்து வருவதால் எனக்குப் பல அமைப்புகள் அந்த பட்டத்தைக் கொடுத்தனர்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்… மூன்று முறை கருக்கலைப்பு செய்தார் -நடிகை மீது புகார் சொன்னவர் கைது!