Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரலட்சுமி விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

வரலட்சுமி விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள்...!!
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் வாரிசு பெறுவதோடு, அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள். விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 

எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக  வழிபடுவர். 
 
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.
 
பலன்கள்:
 
இவ்விரதத்தின் மூலம் குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்  நீங்கும்.
 
கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று  சேர்வார்கள்.
 
இந்த நன்னாளில் அம்மன், கோவில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
 
மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். விரதம் என்பது ஒரே எண்ணத்தில் இடைவிடாது ஒரே சிந்தனையில், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்ம முகூர்த்ததில் சில செயல்களை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...!!