நடிகை த்ரிஷா, ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் விஜய்யின் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்,.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பங்கேற்ற த்ரிஷாவிடம், விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. இதை கண்ட ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். அப்போது த்ரிஷா பேசுகையில், "விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்கு தகுதியானவர்" என்று கூறினார்.
த்ரிஷாவின் இந்தப் பேச்சு, அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் ரசிகர்கள் த்ரிஷாவின் இந்த பேச்சை பெரிய அளவில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் த்ரிஷா கூறுவதை பார்த்து புன்னகைத்த காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.