யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் நேற்று யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அதில் யாஷ் கே ஜி எஃப் கெட்டப்பிலேயே பார் ஒன்றுக்குள் நடந்து செல்வது போலவும், பெண்களின் கவர்ச்சி நடனம் இடம்பெறுவது போலவும் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் காட்சிகளை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு முறைப் படமாக்குவதால் தாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி ஆகிய இரண்டு நடிகைகள் இருக்கும் நிலையில் தற்போது ருக்மிணி வசந்த் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.