Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

26 வருடத்துக்கு மேடையில் பாடிய பாட்டு… இப்போது வைரலாகும் பாடகர் சத்யன் மகாலிங்கம்!

Advertiesment
சத்யன் மகாலிங்கம்

vinoth

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (10:13 IST)
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பாடகர்களுக்கான வாய்ப்புகள் சரியாகக் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானப் பாடல்களை இசையமைப்பாளர்களே பாடி விடுகின்றனர். அப்படி இல்லையென்றால் பாடலுக்கு சம்மந்தமே இல்லாத நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரைப் பாடவைத்து பாடலை பிரபலமாக்குகின்றனர்.

அதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கலக்கி வந்த பாடகர்களான க்ரிஷ், கார்த்தி, நரேஷ் ஐயர் போன்ற பிரபல பாடகர்களுக்கே வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கணிசமான எண்ணிக்கையில் ஹிட் பாடல்கள் பாடி இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த சத்யன் மகாலிங்கம் சமூகவலைதளங்களில் திடீரென வைரல் ஆகி வருகிறார்.

அவர் வைரல் ஆவதற்குக் காரணம் 26 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மேடைக் கச்சேரியில் பாடிய ஒரு பாடல் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம். 1999 ஆம் ஆண்டு சாதகப்பறவைகள் மேடைக் கச்சேரியில் ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலை வெகு சாதாரணமாக படத்தில் இடம்பெற்றது போலவே தனது 19 ஆவது வயதில் பாடியுள்ளார் சத்யன். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக பலரும் பகிர்ந்து அவரைப் பாராட்டி வந்தனர். இதையடுத்து அவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்து தன்னைப் பாராட்டி வருபவர்களுக்கு நெகிழ்ச்சியாக நன்றியைத் தெரிவித்து வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகன் சூர்யா நடித்த ஃபீனிக்ஸ் படத் தயாரிப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி!