தமிழ் சினிமாவில் 90 களின் தொடக்கத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் மதுபாலா. பாலச்சந்தர், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
பல வருடங்களுக்குப் பின்னர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் ஸ்வீட் காரம் காஃபி மற்றும் கண்ணப்பா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் தான் சினிமாவில் கதாநாயகியாக நடித்த போது பாலிவுட்டில் நடிக்க சென்ற போது எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார்.
அதில் “அப்போதெல்லாம் தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் நடிகர்களால் அதிகமாக கேலி செய்யப்பட்டனர். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. நான் இந்தி படங்களில் நடித்தபோது எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னை வருத்தமடையச் செய்தன. என்னால் அப்போது அவர்களுக்கு எதிராக எப்படி செயல்படவேண்டும் என்பது கூட தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.