Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிக் டாக் போனா என்ன? இன்ஸ்டாகிராம் இருக்கே – அசத்தல் நடனமாடிய 44 வயது நடிகை!

Advertiesment
டிக் டாக் போனா என்ன? இன்ஸ்டாகிராம் இருக்கே – அசத்தல் நடனமாடிய 44 வயது நடிகை!
, வியாழன், 23 ஜூலை 2020 (10:57 IST)
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னாள் கதாநாயகி பிரகதி வெளியிட்டுள்ள வீடீயோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படம் உள்ளிட்ட 90 களில் வெளியான பல படங்களில் நடித்தவர் பிரகதி. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னால் நகைச்சுவை நடிகர் ஒருவர் அளித்த பாலியல் தொல்லைப் பற்றி பேசினார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஆனால் அந்த நகைச்சுவை நடிகர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் அம்மா, அண்ணி ஆகிய வேடங்களில் நடித்துவரும் பிரகதி இன்ஸ்டாகிராமில் ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். பம்பாய் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த அரபிக்கடலோரம் பாட்டுக்கு அசத்தலாக பாலே டான்ஸ் ஆடி அதை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பரவி வருகிறது. டிக்டாக் இல்லாததால் நடிகைகள் பலர் இப்போது இன்ஸ்டாகிராமிலேயே இது போல நடன வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மணி ஏஞ்சல்... பஞ்சுவாலிட்டி மெய்ன்டெய்ன் பண்ணி ஹாட் போட்டோ வெளியிடும் நடிகை!