Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதா கொங்கரா படத்தில் அடுத்து நடிக்கப் போவது இவர்தான் ! ருசிகர தகவல்!

சுதா கொங்கரா படத்தில் அடுத்து நடிக்கப் போவது இவர்தான் ! ருசிகர தகவல்!
, சனி, 4 ஜூலை 2020 (14:28 IST)
ஆணவக் கொலையை மையப்படுத்தி சுதா கொங்கரா இயக்க இருக்கும் படத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்க இருக்கிறார்.

கோலிவுட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இயக்குனர்களில் சுதா கொங்கராவும் ஒருவர். அவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பரவலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் வேறு சில காரணங்களால் அந்த படம் தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் ஆணவக் கொலையை மையப்படுத்தி உருவாகும் ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றை நெட்பிளிக்ஸ்க்காக உருவாக்க இருக்கிறார். அதில் கதாநாயகனாக ஷாந்தனு பாக்யராஜ் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆந்தாலஜி படத்தின் மற்ற கதைகளை வெற்றிமாறன், கௌதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு நடிகர்கள் என் வாய்ப்புகளை தட்டிப்பரித்தனர் – தாப்ஸி ஆதங்கம்!