Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாய்ப்பில்லாததால் சீரியலுக்கு வந்த நந்திதா ஸ்வேதா!

வாய்ப்பில்லாததால் சீரியலுக்கு வந்த நந்திதா ஸ்வேதா!
, செவ்வாய், 13 ஜூலை 2021 (16:25 IST)
நடிகை நந்திதா ஸ்வேதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. 

அதனால் சமூகவலைதளங்களில் தனது புதுப்புது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். இப்போது அவருக்கு சீரியலில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலின் சிறப்பு எபிசோட் ஒன்றில் அவர் நடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாஜி மோகனை கழட்டிவிட்ட தனுஷ்!