Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் மீண்டுமா… தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு மீனா பதில்!

மீண்டும் மீண்டுமா… தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு மீனா பதில்!
, திங்கள், 25 மார்ச் 2024 (15:29 IST)
1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

சமீபத்தில் வித்யாசாகர் உடல்நலப் பிரச்சனை காரணமாக காலமானார். அதிலிருந்து அவரின் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் மீனா, ஒரு பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இதற்குப் பலமுறை அவர் விளக்கம் அளித்துவிட்ட பின்னும் இன்னும் வதந்தி ஓய்ந்த பாடில்லை.

இப்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார் மீனா. அதில் “சமூகவலைதளங்களில் உண்மையைப் பேசுங்கள். என்னைப் போல தனிமையில் வாழும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்களின் குழந்தைகளையும் பெற்றோர்களையும் நினைத்துப் பாருங்கள். தற்போதைக்கு எனக்கு மறுமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கு என்பதைப் பற்றி இப்போது எப்படி என்னால் சொல்லமுடியும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் க்யூனாக மாறிய சமந்தா… லேட்டஸ்ட் அட்டகாச போட்டோஷூட்!