கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
அதையடுத்து வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் தனது முதல் படத்தை நடித்து முடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸான மலையாள படமான அங்கமாலி டைரீஸ் ரீமேக்கில் அவர் நடிக்க படத்தை இயக்குனர் மதுமிதா இயக்கியுள்ளார்.
இந்த படம் கடந்த ஆண்டே தொடங்கிய நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.