பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

Siva
ஞாயிறு, 23 நவம்பர் 2025 (14:26 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஏழாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. 49வது நாளான இன்று, இந்த வாரத்தின் வெளியேற்றம் குறித்து எதிர்பாராத தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த 13 போட்டியாளர்களில், நடிகை கெமி நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரம்யா ஜோ, அரோரா போன்ற சிலர் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், கெமியின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பிக் பாஸ் டாஸ்க்குகளில் சிறப்பாக பங்கேற்றாலும், மற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருந்த கெமி, மக்கள் மனதை கவர தவறியதாலும், குறைந்த வாக்குகளை பெற்றதாலும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதற்கு முன், திவாகர், நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments