நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பதினைந்து ஆண்டு கால நண்பரான ஆண்டனியை திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது அவரது திருமண தேதி தொடர்பான தகவல் பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து வருவதாகவும், இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவாவில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
சமீபத்தில், இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கீர்த்தி சுரேஷ் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "பதினைந்து ஆண்டுகளை கடந்து விட்டோம், இனி எப்போதும் தொடரும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளதாகவும், அவரது திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.