பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ஒருவர் 47வது திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பாகுபலி திரைப்படத்தில் நாயகி அனுஷ்காவின் மாமாவாக நடித்திருந்தவர் நடிகர் சுப்புராஜ், கோழையாக இருந்து அதன்பின் வீரமாக மாறி, வீரமரணம் அடைந்த காட்சியில் அவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
										
			        							
								
																	மேலும், இவர் விஜய் நடித்த போக்கிரி, அஜித் நடித்த பில்லா உள்பட சில தமிழ் படங்களிலும், மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
											
									
			        							
								
																	இந்த நிலையில், 47 வயதாகும் நடிகர் சுப்புராஜ் சரா ஷ்ரவந்தி என்ற பல் டாக்டரை மணந்துள்ளதாக தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
									
			                     
							
							
			        							
								
																	இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இந்த காதலை இரு தரப்பு பெற்றவர்களும் ஏற்றுக் கொண்டதை எடுத்து திருமணம் நடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.