Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’தபஸூம்’ புதிய பெயருடன் நடிகை கஸ்தூரி? பர்தா போட்டபடி போஸ்!

Advertiesment
’தபஸூம்’ புதிய பெயருடன் நடிகை கஸ்தூரி? பர்தா போட்டபடி போஸ்!
, செவ்வாய், 7 மே 2019 (08:54 IST)
நடிகை கஸ்தூரி பர்தா போட்டபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
நடிகை கஸ்தூரி படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். ஆனால் சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இன்று ரம்சான் நோன்பு துவங்கியுள்ளது. 
 
எனவே அவர் பர்தா அணிந்துபடி உள்ள போட்டோவையும், தொழுகை செய்யும்படி உள்ள போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இட்ந்த போட்டோவை மட்டும் பார்த்துவிட்டு கஸ்தூரி மதம் மாறிவிட்டாரா என கேட்டு வருகின்றனர். 
webdunia
ஆனால், இந்த போட்டோவோடு ஒரு பதிவையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த மாதம் நோன்பு உள்ள அனைவருக்கும் ரமதான் கரீம். ஹைதராபாதி முஸ்லீம் பெண்னாக ஒரு படத்தில் நடிப்பது தெய்வீகமான ஒன்றாக உள்ளது. எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என கற்று கொண்டேன் என பதிவிட்டுள்ளார். 
 
மேலும், இந்த பதிவிற்கு பல கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன, அதில் ஒருவர் உங்களது முஸ்லீம் பெயர் என்னவோ என கேட்க அதற்கு தபஸூம் எனவும் படதிலளித்துள்ளார். இது எந்த படத்திற்காக என்ற தகவல் தெரியாத நிலையில், அந்த படத்தில் கஸ்தூரியின் கதாபத்திரத்தின் பெயர் தபஸூம் என தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவில் பிறந்த நாள் கொண்டாடிய 'சின்னமச்சான்' புகழ் ராஜலட்சுமி