Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி ... வைரலாகும் வீடியோ

Advertiesment
பைக்கில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி ... வைரலாகும் வீடியோ
, வெள்ளி, 3 மே 2019 (20:48 IST)
இவர்களைப் பார்த்து இதெல்லாம் கற்றுக்கொள்! என்று வெற்றி பெற்றவர்களின் ஒழுக்கத்தைப் பார்த்து பெற்றோர் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறியது ஒருகாலம். ஆனால் சமீபகாலமாக சினிமாக்களில் காட்டப்படும்  சில காட்சிகளில் காதல் என்ற  பெயரால் இளைஞர்களின் மனதில் தேவையில்லாத கற்பனைகளையும் மனோபாவத்தையும் வளர்ப்பதாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 1998 ஆம் ஆண்டில்  அமீர்கான் - ராணிமுகர்ஜி நடிப்பில்  வெளியாகி ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த படமான குலாம் படத்தில் பைக்கில் அமீர்கான் செல்லும் பொழுது பெட்ரோல் டேங்கில் ராணிமுகர்ஜி உட்கார்ந்து ஹீரோவைக் கட்டி அணைப்பது போன்று ஒரு காட்சி இருக்கும்.அது அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது.
 
அதேபோல் சமீபத்தில் மேற்கு டெல்லியில் உள்ள ரஜௌரி கார்டன் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் இருக்கும் இரவு வேளையில் ஒரு ஜோடி பைக்கில் சென்றது. சினிமாவையே மிஞ்சுவது போல் பெட்ரோல் டேங்கின் மீது உட்கார்ந்திருந்த அப்பெண், தனது காதலனை கட்டிப்அணைத்தடியே இருக்கிறார். பைக்கை ஓட்டும் காதலன் மிகுந்த சிரமப்பட்டு சாலையில் வேகமாக தனது வாகனத்தை இயக்குகிறார். 
 
இந்த வீடியோவை எச்.ஜி.எல்.தலிவால் ஐ.பி.எஸ் என்பவர்  செல்போனில் படம் பிடித்து தனது டுடிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
இம்மாதிரி போக்குவரத்து விதிமீறலுக்கு,  வாகன சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கூறிவருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை தூக்கிவீசிய ஃபானிபுயல் ...வைரலாகும் வீடியோ