Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொத்துகளை அடமானம் வைத்து எமர்ஜென்ஸி படத்தை எடுத்துள்ளேன்… கங்கனா ரனாவத் பதிவு!

சொத்துகளை அடமானம் வைத்து எமர்ஜென்ஸி படத்தை எடுத்துள்ளேன்… கங்கனா ரனாவத் பதிவு!
, ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:56 IST)
கங்கனா ரனாவத் சமீபத்தில் பல மொழிகளில் உருவான தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்து முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது எமர்ஜென்ஸி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அறிவித்துள்ள கங்கனா “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்து வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தாரா 2 வேலைகள் தொடக்கம்… ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!