Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்ர்ஜென்ஸி படத்துக்காக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் அனுமதி கேட்ட கங்கனா!

Advertiesment
எம்ர்ஜென்ஸி படத்துக்காக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் அனுமதி கேட்ட கங்கனா!
, திங்கள், 19 டிசம்பர் 2022 (16:30 IST)
கங்கனா ரனாவத் சமீபத்தில் பல மொழிகளில் உருவான தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இது குறித்து முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங்குக்ககாக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மக்களவை செயலருக்கு கங்கனா கடிதம் எழுதியுள்ளார். தீவிர பாஜக ஆதரவாளரான கங்கனாவுக்கு அனுமதி கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு மூன்றாவது பாடல் ரிலீஸ் எப்போ? வெளியான தகவல்!