2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ராதிகா, ரவி மரியா உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில் கதாநாயகி யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கங்கனா ஏற்கனவே தலைவி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.