நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு, அவரது மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர், சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை திடீர் உடல்நல குறைவால் ரோபோ சங்கர் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரோபோ சங்கரின் இழப்பை தாங்க முடியாத அவரது மகள் இந்திரஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அந்த பதிவில் இந்திரஜா, "நீங்கள் இல்லாமல் மூன்று நாட்கள் ஆகிவிட்டது. எங்களை அதிகமாக சிரிக்க வைத்த நீங்கள், இப்போது எங்களை அதிகமாக அழ வைக்கிறீர்கள். இந்த மூன்று நாட்களில் எனக்கு உலகமே தெரியவில்லை. நீங்கள் இல்லாமல் இந்த குடும்பத்தை நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை. ஆனால், நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்ததுபோல நான் கண்டிப்பாக பலமாக இருப்பேன். விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன். உங்களை நான் பெருமைப்படுத்துவேன் அப்பா," என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திரஜாவின் இந்த உணர்ச்சிபூர்வமான பதிவுக்கு, ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.