தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2025 (09:53 IST)
2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா.  ஆனால் அவரை முன்னணி நடிகை ஆக்கியது தெலுங்கு சினிமாதான். கேடி படத்துக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து விஜய் நடித்த நண்பன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ்ப் படத்திலுமே நடிக்கவில்லை.

தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே இந்திக்கு சென்ற இலியானா அங்கும் பிரபல நடிகையானார்.  பர்ஃபி போன்ற படங்கள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன. கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். திருமணம் ஆகாத இலியானா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதன் பின்னர் அவர் தன்னுடைய காதலர் மைக்கேல் டோலனை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். இல்லற வாழ்க்கைக் காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட இலியானா தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட்த் தொடங்கியுள்ளார்.

ஏன் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு “நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். என்னை அழைத்தால் ஓடோடி வந்திருப்பேன்” எனப் பதிலளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments