Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை!

பாஜகவில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை!
, திங்கள், 6 மே 2019 (19:35 IST)
பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான காயத்ரி ரகுராம், தீவிர பாஜக ஆதரவாளராகவும், மோடியின் ஆதரவாளராகவும் இருந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து மட்டுமின்றி அரசியலில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாகவே காயத்ரி ரகுராமுக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கும் கருத்துவேறுபாடு இருந்து வந்த நிலையில் இன்று திடீரென இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
“வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. தொண்டர்களை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. அதனால் கட்சியில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. 
 
சினிமாவைவிட, அரசியலில்  நடிகர்கள் அதிகம் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது.
 
webdunia
அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று காயத்ரி தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!