Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஷ்புவின் விபரீத ஆசை; தமிழிசைக்கு நோஸ் கட்!!

Advertiesment
குஷ்பு
, ஞாயிறு, 5 மே 2019 (15:38 IST)
நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தமிழிசை நோட்டாவை விட அதிக வாக்கு பெற வேண்டும் என ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
சமீபத்திய பேட்டியில் நடிகை குஷ்பு பேசியதாவது, மோடி மீது மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே இருக்கிறது. 
 
ராகுலை பார்த்து உங்கள் தந்தை ஒரு ஊழல்வாதியாகத்தான் இறந்தார் என்கிறார். மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் கீழ்த்தரமான வார்த்தைகளை எல்லாம் பேசத் தொடங்கிவிட்டார். 
அதிமுகவினர் இன்று மோடியை தூக்கிப்பிடிக்கிறார்கள். அவர்களது தலைவி ஜெயலலிதாவையும் குற்றவாளியாகத்தானே இறந்தார் என்று மோடி பேசமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?
 
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது. தமிழிசை மீது மட்டும் எனக்கு ஒரு ஆசை. அவரும் ஒரு பெண் என்பதால் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கி தோற்க கூடாது. நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் வெப்பச்சலன மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல் !