விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படம் பற்றி விஜய் தேவரகொண்ட முன்பு பதிவிட்ட பதிவு ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது.
படத்தின் ரிலீஸூக்கு முன்பாக இந்த படத்தை 200 கோடி ரூபாய்க்கு ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. அது சம்மந்தமான ஒரு பதிவை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா “நாங்கள் இதைவிட அதிகமாக திரையரங்கில் வசூலிப்போம்” எனக் கூறி இருந்தார். அந்த பதிவு தற்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.